சென்னையில் முதல் ஆடம்பர கழிப்பிடம் இந்திரா நகரில் “லூகாஃபே தூய” என்ற பெயரில் திறக்கப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள்,மூன்றாம் பாலினத்தவர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் இந்த கழிவறையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்குள் இதேபோல் சென்னையில் 50 கழிவறைகளும்,தமிழகம் முழுவதும் 100 கறி வகைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் பெரிய பெரிய நகரங்களில் கழிப்பறை வசதி இன்னும் குறைவாக இருப்பதால் மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
அதனால் மக்களின் சிரமத்தை போக்க சிறப்பு வசதிகளுடன் கூடிய சொகுசு கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களின் இலவச பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது. அங்கு துர்நாற்றத்தை கணக்கிடும் வகையில் மீட்டர் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. துர்நாற்றம் அதிகரித்தால் அந்த மீட்டர் எச்சரிக்கை செய்யும். அதன் மூலமாக துர்நாற்றத்தை சரிசெய்யலாம். இதில் அனைத்து வித வசதிகளும் இடம்பெற்றுள்ளன.