Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் சோகம்….. தனியார் பள்ளி வாகனம் மோதி 7 வயது சிறுவன் பரிதாப பலி…!!

பள்ளி வேன் மோதி பள்ளி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் இருக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வரக்கூடிய மாணவன் தீக்ஷித்.. இவர் இன்று தனது பள்ளி வாகனத்தில் பள்ளிக்கு வந்து இருக்கிறார்.. அப்போது அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு சென்று இருக்கிறார்கள்.. அவனும் பள்ளிக்கு சென்றிருக்கிறான்… இதையடுத்து தன்னுடைய பொருள் ஒன்று பள்ளி வேனில் இருப்பதை எடுப்பதற்காக மீண்டும் பள்ளி வேனுக்கு அந்த மாணவன் வந்திருக்கிறான்..

அப்போது எதிர்பாரதவிதமாக பள்ளி வேனை ஓட்டுநர் பூங்காவனம் இயக்கியுள்ளார். இதனால் வேன் மோதி கீழே விழுந்து மாணவன் படுகாயமடைந்துள்ளார்.. இதையடுத்து உடனே அருகில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனைக்கு அந்த மாணவர்  கொண்டு செல்லப்பட்டார். ஆனாலும் செல்லும் வழியிலேயே மாணவன் பரிதாபமாக இறந்துவிட்டார்..

அதனை தொடர்ந்து மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பள்ளியில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. காவல்துறை துணை ஆணையர் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து தொடர்பாக நேரடியாக விசாரணை நடத்தி வருகின்றார்..

விபத்து தொடர்பாக பள்ளி நிர்வாகம் எந்த ஒரு விளக்கத்தை தெளிவாக அளிக்கவில்லை என்று பெற்றோர் தரப்பில் முன் வைத்தார்கள்.. மேலும் வேன் டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. தாயார் ஜெனிஃபர் இதுதொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பள்ளிக்குள் யாரையும் அனுமதிக்க முடியாது என்று காவல் துறையினர் மறுத்திருக்கிறார்கள்.. இந்த பள்ளி வளாகத்திற்கு அருகில் நுழைவாயில் பகுதியில் இடது புறத்தில் பள்ளி வாகனம் நிறுத்துவதற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Categories

Tech |