தமிழகத்தில் மகளிர், மூத்த குடிமக்கள் மற்றும் 5 வயது வரை உள்ள சிறார்கள் அனைவருக்கும் பேருந்துகளில் பயணிக்க கட்டணம் கிடையாது. அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப் படுவதாக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னைவாழ் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வருகின்ற ஜூன் இருபத்தி ஒன்றாம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை வழங்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.டோக்கனை பெற்றுக்கொண்டு 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் குளிர்சாதன வசதி இல்லாத சென்னை மாநகர போக்குவரத்து கழக அனைத்து பேருந்துகளிலும் கட்டணம் இல்லாமல் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளது.
Categories