சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் 400 கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் இன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனைவரும் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்யும் வகையில் மாநகராட்சியின் 200 வார்டுகளில் தலா இரண்டு முகாம்கள் என மொத்தம் 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் இன்று நடத்தப்பட உள்ளது.
அதில் 200 சிறப்பு முகாம்கள் அந்த அந்த வார்டில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நல மருத்துவமனைகள், சிறு மருத்துவமனைகள் அல்லது வார்டு அலுவலகங்கள், பகுதி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் போன்ற ஏதேனும் ஒரு இடத்தில் அமைக்கப்பட உள்ளன. மேலும் 200 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஒவ்வொரு வார்டிலும் தற்காலிக முகாம்களாக அமைக்கப்பட உள்ளது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்த அறிய வாய்ப்பை தவறவிடாமல் சென்னை மாநகர பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.