பிரபலமான ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 மாடலை செப்டம்பர் 7-ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த போன் கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. அந்த வகையில் கூடிய விரைவில் சென்னையிலும் ஐபோன் 14 மாடல் அறிமுகமாக இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே பிரச்சனை நடந்து வருகிறது. இதன் காரணமாக ஐபோன் நிறுவனம் தன்னுடைய உற்பத்தியை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பாக்ஸ்கான் நிறுவனத்தில் ஐ போன் 14 மாடல்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த போன்கள் ஓரிரு நாட்களில் சென்னை மக்களை வந்தடையும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஐபோன் 14 மாடலை உள்நாட்டில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஐபோன் நிறுவனம் ஐபோன் எஸ்இ மாடலை இந்தியாவில் உற்பத்தி செய்ய தொடங்கியது. இதை தொடர்ந்து ஐபோன் 12, 13 மாடல்களையும் உற்பத்தி செய்தது. மேலும் இந்தியா மட்டுமின்றி தென் கிழக்கு ஆசிய நாடுகள், வியட்நாம் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளிலும் உற்பத்தியை தொடங்குவதற்கு ஐபோன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.