தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பரப்புரை இன்று (பிப்ரவரி 17) மாலையுடன் நிறைவடைய இருப்பதால் அதிமுக-திமுக போட்டிப்போட்டு பணப்பட்டுவாடா செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை 143-வது வார்டில் வாக்காளர்களுக்கு ரூபாய் 2,000 மதிப்பிலான பட்டுப்புடவை தர அதிமுக டோக்கன் அச்சடித்ததாக திமுக குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அதிமுக தரப்பு நாங்கள் ஒன்றும்டோக்கன் தரவில்லை, திமுக தான் ரூபாய் 3,000 -ரூபாய் 5,000 வரை பணப்பட்டுவாடா செய்வதாக குற்றம் சாட்டியுள்ளது