சென்னை சித்தலப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீதர் என்பவர் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் ஸ்ரீதர் வளர்க்கும் நாய் ரத்த காயங்களுடன் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதர் உடனடியாக அதை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அப்போது நாய் உடலில் துப்பாக்கி தோட்டா இருந்தது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து ஸ்ரீதர் உடனடியாக பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார். ஆனால் காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்யாமல் அலட்சியம் காட்டினர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் மாடியில் இருந்து நாய் ஒன்றை தூக்கி வீசியவர் சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.