Categories
மாநில செய்திகள்

“சென்னையில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை”…… மாநகராட்சி அதிரடி…..!!!!

பெரும்பாலான வீடுகளில் நாய்களை செல்ல பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். சென்னை போன்ற பெரு நகரங்களில் நாய்கள் ஜாக்கிரதை என்கின்ற எச்சரிக்கை போர்டு பல வீடுகளின் கதவுகளில் தொங்குவதை பார்த்திருப்போம். தங்களது வீட்டுக்கு வருபவர்களை உஷார்ப்படுத்துவதற்காக இதை வைத்திருந்தனர். இன்று சென்னை மாநகரில் தெரு நாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அவைகள் பொதுமக்களை குறி வைத்து வேட்டையாடி வருகின்றது.

மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை தெரு நாய் கூட்டம் கும்பலாக சூழ்ந்து கடித்து வருகிறது. இதனால் உயிருக்கு பயந்து மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சம்பவம் வீடியோ நிறைய பார்த்திருப்போம். சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் தெரு நாய்களால் மக்கள் அவதி வரும் நிகழ்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் முயற்சிகள் இறங்கிய சென்னை மாநகராட்சி தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், ரேபிஸ் நோயை தடுக்கவும் மேலும் 2 விலங்கு பிறப்பு கட்டுப்பாடு மையங்கள் திறக்க உள்ளது. சென்னையில் ஏற்கனவே மூன்று மையங்கள் உள்ள நிலையில் நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் மேலும் இரண்டு விலங்கு மையங்கள் திறக்கப்பட உள்ளது.

Categories

Tech |