தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அரசியல் கட்சிகள் இன்று மாலை தேநீர் விருந்தில் பங்கேற்க ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். இதனை புறக்கணிப்பதாக முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியிருந்தது. நீட் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாதது போன்ற காரணங்களை பட்டியலிட்டு மாநில அரசின் அதிகாரத்தை மீறி ஆளுநர் அதிகார மையமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி அந்த கட்சி ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்தாக கூறியிருந்தது. அதன் தொடர்ச்சியாக தமிழர் உணர்வுகளை அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைப்பது தமிழக தலைவர்களை கேலி செய்வதாக இருக்கிறது.
தமிழர் விரோத போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆளுநரின் தேநீர் விருந்து அழைப்பை புறக்கணிப்பதாக தேசிய தலைவர் தொல் திருமாவளவன் அறிவித்திருந்தார். இந்த நிலையில் ஆளுநர் தேனீர் விருந்தில் அதிமுக கலந்து கொள்ளும் என அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முன்னதாக இன்று மாலை தமிழக ஆளுநர் ரவி அழைக்கும் தேனீர் விருந்தில் திமுக பங்கேற்காது என தமிழகம் தென்னரசு கூறியுள்ளார். தமிழக ஆளுநரை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் மா சுப்பிரமணியன் போன்றோர் இன்று சந்தித்துள்ளனர். நீட் விலக்கு மசோதா போன்ற தமிழக அரசு அனுப்பி வைத்த கோப்புகளை ஆளுநர் நிலுவையில் வைத்திருக்கும் நிலையில் அதுதொடர்பாக சந்திப்பு நடைபெற்றுள்ளது. சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு நீர் விளக்கு மசோதாவில் அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளுநர் முடிவு எடுக்காதது ஏமாற்றம் அளிப்பதாக கூறியுள்ளார்.
மேலும் தேனீர் விருந்தில் கலந்து கொள்வது சட்டமன்றத்தின் மாண்பை குறிப்பதாகவும் இருக்கும் தமிழக சட்டசபையின் மாண்பையும் மக்களையும் தமிழ்நாடு ஆளுநர் மதிக்காததால் தேநீர் விருந்தை புறக்கணித்த தாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு அப்போது தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.