சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி கொண்டிருப்பதால் அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. சென்னை சுற்றுப்புற பகுதியான சேப்பாக்கம், எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, கோடம்பாக்கம், திநகர், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, கிண்டி மற்றும் புறநகர் பகுதியான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், ஆலந்தூர், நங்கநல்லூர், மேடவாக்கம், கோவிலம்பாக்கம் மற்றும் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது.