Categories
மாநில செய்திகள்

சென்னையில் தொற்றை குறைத்தால் தான்….. மற்ற பகுதிகளில் குறையும்…. அமைச்சர் தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றும்படி அரசு அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், சென்னையில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தினால் மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் பார்த்துக் கொள்ள முடியும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |