Categories
கிரிக்கெட் விளையாட்டு

சென்னையில் நடக்கும்…. 15,000பேர் வாங்க….. அனுமதி தாறோம்…. வெளியான முக்கிய தகவல் …!!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை காண 15 ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிகிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இப்போது முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. கொரோனா  விதிமுறைகள் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியை கான ரசிகர்கள் அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் மத்திய அரசின் பொதுமுடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, சென்னையில் பிப்ரவரி 13 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் என்றும்,

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இதை அடுத்து இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்குவதாகவும் மேலும் 15,000 டிக்கெட் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்றும் தெரிகிறது.  இந்த டிக்கெட் விற்பனை  ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என்றும், மைதானத்திற்கு போட்டியை காண வருகை தரும் ரசிகர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |