Categories
மாநில செய்திகள்

சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசியவர்களை கண்டுபிடித்து விட்டோம் – ஏ.கே. விஸ்வநாதன்!

சென்னையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அண்ணா மேம்பாலத்தில் நேற்று மாலை 4 மணி அளவில் இரண்டு குண்டுகள் வீசப்பட்டன. அடுத்தடுத்து வீசப்பட்ட இரண்டு குண்டுகளும் வெடித்து புகை கிளம்பியதால் பெரும் பதட்டம் உருவானது. இதே போல் சென்னை விமானநிலையத்தை அடுத்துள்ள குழிச்சலூரில் இரவுவேளையில் இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் வெடிகுண்டுகளை வீசியதில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

போக்குவரத்து அதிகம் உள்ள மாலை நேரத்தில் நாட்டு வெடிகுண்டை வீசிச்சென்றதால், அண்ணா சாலையில் பயணித்தவர்கள் பதற்றம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் சமபவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தார். இதுகுறித்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இன்று மாலை செய்தியாளர்களையே சந்தித்த சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன், நாட்டு வெடிகுண்டு வீசியவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து விட்டோம் என தெரிவித்துள்ளார். சிசிடிவி காட்சிகளை பயன்படுத்தி, குண்டு வீசிச்சென்றவர்களை அடையாளம் காணப்பட்டுள்ளது.

விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம் எனவும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து வெடிகுண்டு வீசி பிடிப்பட்ட ஒருவரிடம் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. தப்பி ஓடிய மற்றவர்களை பிடிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தனர்.

Categories

Tech |