சென்னையில் நாளை(ஜூலை 5) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்யப்பட உள்ளது. அதன்படி மயிலாப்பூர், எழும்பூர், தாம்பரம், கிண்டி, ஐடி காரிடர், ஆவடி, வேளச்சேரி, அடையாறு, வியாசர்பாடி, கே.கே நகர் துணை மின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாப்பூர் பகுதி : முண்டக்கண்ணியம்மன் கோயில் தெரு, திருவள்ளுவர் கோயில் தெரு, அப்பாதுரை கோயில் தோட்டம் மற்றும்இதனை சுற்றியுள்ள பகுதிகள்.
எழுப்பூர் பகுதி : ராமனுஜம் தெரு, முனியப்பா தெரு, வால்டாக்ஸ் சாலை, அண்ணாபிள்ளை தெரு, துலசிங்கம் தெரு, டி.வி பேசின் தெரு, சின்ன தம்பி தெரு, வீரப்பன் தெரு, கல்யாணபுரம், ரமனன் சாலை, கோவிந்தப்பா தெரு, கொண்டித்தோப்பு தெரு மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகள்.
தாம்பரம் பகுதி: மாடம்பாக்கம் வேங்கைவாசல், இந்திரா நகர், ஜி.வி நகர் பெரும்பாக்கம் மூவேந்தரா தெரு, அம்பேத்கர் தெரு, கஜேந்திரன் நகர், ராம் கார்டன் ஈ.டி.எல் ஐஐடி காலனி பகுதி, ஆறுமுகம் நகர் பகுதி, வி.ஜி.பி சாந்தி நகர், வ.உ.சி தெரு மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகள்.
கிண்டி பகுதி: மடிப்பாக்கம் தனகல் சாலை, குளக்கரை தெரு நந்தம்பாக்கம் வன்னியர் தெரு, ராமசந்திரா நகர் மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகள்.
ஐடி காரிடர் பகுதி ; ஆனந்தா பகுதி, பிள்ளையார் கோயில் தெரு, கங்கையம்மன் கோயில் தெரு, எழில் நகர், ஒ.எம்.ஆ பகுதி, டி.வி.எச் அப்பார்ட்மென்ட் மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகள்.
ஆவடி பகுதி : திருமுல்லைவாயில் சாந்திபுரம், மணிகண்டபுரம், கலைஞர் நகர் ஐஐடி காந்தி மண்டபம் ரோடு, நாயுடு தெரு, கொட்டூர்புரம் குடியிருப்பு, சயின்ஸ் சிட்டி மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகள்.
அடையார் பகுதி : பெசன்ட் நகர் 4வது மெயின் ரோடு, 3வது மற்றும் 5வது அவென்யூ, திருவள்ளுவர் நகர், பஜனை கோயில் தெரு ஈஞ்சம்பாக்கம் ஈஞ்சம்பாக்கம் குப்பம், கங்கையம்மன் கோயில் தெரு, பல்லவன் நகர், ஈ.சி.ஆர் ரோடு, ராஜீவ் அவென்யூ திருவான்மியூர் கண்ணாப்பா நகர், ஸ்ரீராம் அவென்யூ, சுவாமிநாதன் நகர், சுப்பிரமணி தெரு, அவ்வை நகர் மெயின் ரோடு, களத்துமேடு 1 முதல் 9 வரை தெரு, செல்வராஜ் அவென்யூ மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
வியாசர்பாடி பகுதி : கே.எம்.ஏ கார்டன், கே.ஏ கோயில், தென்றல் நகர். திருத்தங்கல் நகர் அசோக் நகர் மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகள்.
கே.கே பகுதி : சின்மையா நகர் சாய் நகர் அனக்ஸ், காளியம்மன் கோயில் தெரு, சின்மையா நகர் பகுதி, காந்தி தெரு, வாரியர் தெரு, ராஜீவ் காந்தி தெரு, கண்ணகி நகர் தெற்கு, தாங்கல் தெரு, எஸ்.பி.ஐ காலனி மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகள்.