மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் நாளை (ஏப்ரல் 4) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின் வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தினமும் ஏற்படுகின்ற மின் கசிவு மற்றும் மின் கோளாறு காரணமாக பல்வேறு விபத்துகள் ஏற்படுகிறது. அத்துடன் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. அதனால் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் அதற்கு உட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும்.
இந்நிலையில் மின்தடை நேரமானது குறைந்த பட்சம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இருக்கும். மேலும் அதிகபட்சமாக காலை 9 மணி முதல் 6 மணி வரை இருக்கும். அந்த வகையில் மின்தடையானது ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதிகளுக்கும் மாதத்தில் ஒரு முறை செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் ஆவடி, கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் நாளை சென்னையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை போரூர் – திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள பூந்தண்டலம், வழதலம்பேடு பெரியார் நகர், குன்றத்தூர் பஜார், குன்றத்தூர் பகுதி, திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை, சோமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின் வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு சென்னை கிண்டியில் மின்தடை ஏற்படும் பகுதிகள் திருவள்ளுவர் தெரு மூவரசம்பேட்டை யோகேஸ்வரன் தெரு, எம்.ஜி.ஆர் தெரு, மேடவாக்கம் பிரதான சாலை, செயின்ட் தாமஸ் மவுன்ட் மரியபுரம், துலசிங்கபுரம், கலைஞர் நகர் ஆலந்தூர் சிமெண்ட் ரோடு, பிச்சன் தெரு, நரசிங்கபுரம் (பகுதி), பிள்ளையார் கோவில் தெரு, கல்லூரி சாலை, கோவிந்தசாமி சாலை, பாலாஜி நகர் நங்கநல்லூர் விஸ்வநாதபுரம், ராஜ்பவன் ரேஸ் கோர்ஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் அத்துடன் தாம்பரம் பகுதியில் உள்ள ஆர்த்தி நகர், 100 அடி சாலை, சிட்லப்பாக்கம் ராமகிருஷ்ணபுரம், வேளச்சேரி பிரதான சாலை, மோத்திலால் நகர், கலைவாணர் பூங்கா, இலட்சுமி நகர், எம்.இ.எஸ் சாலை கல்யாண சுந்தரம் தெரு கிழக்கு தாம்பரம் சுதானந்தா பாரதி தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து செம்பியம் பகுதியில் முத்தமிழ் நகரின் 1,6 வது மற்றும் 8வது பிளாக் மற்றும் டைடல் பார்க்–எழில் நகர் பகுதியில் ராம்ஸ ராகவி அப்பார்ட்ஸ்மென்ட்ஸ், துரைப்பாக்கம் கண்ணகி நகர், எழில் நகர் பெருங்குடி பெருந்தலைவர் காமராஜர் நகர், பிரதான சாலையின் 1,2,3வது குறுக்கு தெரு மற்றும் ஆவடி பகுதியில் வேல்டெக் ஜங்கஷன் காமராஜர் நகர், ஸ்ரீனிவாசா நகர், அரவிந்த நகர், கோவர்த்தனகிரி, வசந்தம்நகர், சந்திராசிட்டி, அலமாதி பங்காரம்பேட்டை கிராமம், வீரபுரம் கிராமம், பாரதி நகர் மற்றும் அதனை சுற்றுவட்டார பகுதிகளிலும் நாளை (ஏப்.4) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின் வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.