Categories
மாநில செய்திகள்

சென்னையில் நாளை ஒருநாள் மின்தடை… அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணியின் காரணமாக சென்னையில் சில இடங்களில் மின் தடை செய்யப்படுவதாக தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி, கோயம்பேடு மார்கெட், கிண்டி, வில்லிவாக்கம், அடையாறு, ஐடி பார்க், பெரும்பாக்கம், கே.கே.நகர் பகுதிகளில் மின் தடை செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் உள்ள ஸ்ரீனிவாசா நகர், பி.ஹெச்.ரோடு, அழகம்மாள் நகர், கிருஷ்ணா நகர், கனகசபை காலனி, பெருமாள் கோயில் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

Categories

Tech |