தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிக்காக மின்தடை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் தரமணி பகுதியில் நாளை மின் வினியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சி.எஸ்.ஐ.ஆர் ரோடு, எம்.ஜி.ஆர் நகர், தரமணி, கானகம் மெயின் ரோடு, வி.வி கோயில் தெரு ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிக்கை தெரிவித்துள்ளது. அத்துடன் மின் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் உடனடியாக மின் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.