Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் பரபரப்பு!!…. தந்தையை அடித்து கொன்ற மகன்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தந்தையை அடித்து கொன்ற வாலிபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள எம். எம். டி. 2-வது பிரதான சாலை பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் பாலசுப்பிரமணியனின் மூத்த மகனான சிவக்குமார் என்பவர் கொரோனா   தொற்றின் காரணமாக வெளிநாட்டில் இருந்து வந்து  தனது  குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி பாலசுப்பிரமணியனுக்கும்  சிவகுமாருக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக   தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த  சிவகுமார்  பாலசுப்பிரமணியனை   சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த  பாலசுப்பிரமணியனை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணியன்  பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிவகுமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |