பெயிண்டரை கொலை செய்த மனைவி உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலப்பாக்கம் பகுதிகள் பெயிண்டரான
ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி வசந்தா காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராஜேந்திரனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அந்த அறிக்கையில் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜேந்திரனின் மனைவி வசந்தா, மகள் ராஜேஸ்வரி, மருமகன் பிரதாப் ஆகியோரிடம் விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் ராஜேந்திரன் தினமும் மது குடித்துவிட்டு தகராறு செய்து வந்ததாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் ராஜேந்திரனின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.