Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் பரவலாக மழை – போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி

சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இது குறித்த நேரடி தகவல்களை தர கிண்டியில் இருந்து எமது செய்தியாளர் உசைன் நம்முடன் இணைந்துள்ளார்.  

தமிழக கடலோர மற்றும் தென்மேற்கு வங்கக் கடலையொட்டி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 4, 5, 6, 7 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் வடகிழக்கு பருவ மழையானது துவங்கி பெய்து வரும் சூழ்நிலையில் சென்னையில் காலை முதலே ஒரு மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது.

கோடம்பாக்கம், வள்ளுவர்கோட்டம், வடபழனி, கிண்டி, மெரினா கடற்கரை உள்ளிட்ட சென்னை முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழைக்கு ஆங்காங்கே நீரானது தேங்கி காணப்படுகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் மலையில் நின்றுகொண்டு இருப்பது தெரிகிறது. மழை தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

Categories

Tech |