சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் எனவும், சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியது.இந்நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று மழை பெய்தது. அயனாவரம், மணலி, பெரம்பூர், அம்பத்தூர், விருகம்பாக்கம், மடிப்பாக்கம், ஆழ்வார்பேட்டை, ஆவடி, நுங்கம்பாக்கம், கொளத்தூர், வளசரவாக்கம், ஈக்காட்டுத்தாங்கல் போன்ற இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
அதுமட்டுமன்றி அடையாறு,பசுமைவழிச் சாலை, சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், சாலிகிராமம், தி.நகர், பெருங்களத்தூர் மற்றும் வண்டலூர் போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.