சென்னை வியாசர்பாடியில் போதையில் பிரியாணி சாப்பிட்ட குறும்பட நடிகர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரியாணி சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு சென்ற நடிகர் ரஞ்சித் (22) உயிரிழந்தது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரியாணி சாப்பிட்டு ஒருவர் மரணம் என்ற செய்தி காட்டுத்தீ போல பரவி வருகிறது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ரஞ்சித்தின் உடலை பிரேத பரிசோதனை செய்தபிறகே அவரது இறப்புக்கான காரணம் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.
Categories