Categories
மாநில செய்திகள்

சென்னையில் பூத் சிலிப்புடன் பணப்பட்டுவாடா…. பரபரப்பு புகார்….!!!!!

தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னை திருவான்மியூர் சிங்காரவேலன் நகரில் பூத் சிலிப்புடன் அதிமுக-வினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக திமுக புகார் அளித்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பூத் சிலிப்புகள் பணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோன்று சைதாப்பேட்டை, வடபழனி பகுதியில் திமுக-வினர் பணப்பட்டுவாடா செய்வதாக அதிமுக-வினர் புகார் கூறியுள்ளனர்.

Categories

Tech |