சென்னையில் பெண்களை அடைத்து வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய ஐந்து பேரை போலீசார் கைது செய்தார்கள்.
சென்னையில் பெண்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சாலிகிராமம் சாந்தி காலனி தில்லையாடி வள்ளியம்மை தெருவில் ஒரு வீட்டை ரகசியமாக கண்காணித்ததில் ஒரு பெண்ணை அடைத்து வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதியானது.
இதையடுத்து பெண் போலீசார் வீட்டை சோதனையிட்டதில் அங்கே பெண்ணை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த கார்த்திகேயன், நெல்சன் உள்ளிட்ட இருவரை கைது செய்தார்கள். அங்கே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட ஒரு பெண்ணை போலீசார் மீட்டார்கள். மேலும் அவர்களிடமிருந்து மூன்று செல்போன்களையும் பறிமுதல் செய்தார்கள்.
இதுபோலவே திருவேங்கடசாமி தெருவில் இருக்கும் ஒரு வீட்டிலும் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசியம் தகவல் கிடைத்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் அப்பகுதியைச் சேர்ந்த சாந்தி, தேவி, சீதா தேவி உள்ளிட்ட மூன்று பெண்களை கைது செய்தார்கள்.