தமிழகத்தில் தற்போது கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதுவும் ஏடிஎம்களில் அதிகமாக திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது. அடிஎம் மெஷினில் பணத்தை திருடுவது மட்டுமல்லாமல் ஏடிஎம் மிஷின்களையே திருடும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் சென்னையில் எஸ்பிஐ பணம் டெபாசிட் எடுக்கும் வசதி உள்ள ஏடிஎம்மில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
பணத்தை வெளியே தள்ளும் ஷட்டரில் 20 நொடிகள் பணம் எடுக்காவிட்டால் பணம் மீண்டும் உள்ளே சென்றுவிடும். பணம் எடுத்த பிறகு ஷட்டரை 20 நொடிகள் பிடித்துக்கொண்டால் பணம் உள்ளே சென்றதாக பதிவாகிவிடும். இதை பயன்படுத்தி நபர் ஒருவர் ஷட்டரை கையில் பிடித்தபடி ஒவ்வொரு முறையும் தலா ரூ.10,000 என எடுத்து பல லட்சம் மோசடி செய்துள்ளார். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.