Categories
மாநில செய்திகள்

சென்னையில் பேருந்து மோதி வழிகாட்டி பலகை விழுந்து உயிரிழந்த நபரின் குடும்பத்துக்கு ₹3 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்..!!

ஆசர்கானா பேருந்து நிறுத்தத்தின் அருகே விளம்பரப் பலகையின் மீது மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இரங்கல் மற்றும் நிவாரண உதவியை அறிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (7-8-2022) பெருங்களத்தூரில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்த மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று ஜிஎஸ்டி சாலையில் ஆலந்தூர் – ஆசர்கானா பேருந்து நிறுத்தத்திற்கு முன்னதாக செல்லும்போது சாலையின் அருகில் இருந்த விளம்பரப் பலகையில் மோதி, அப்பலகை சாலையில் சாய்ந்ததில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த திரு.பி.சண்முக சுந்தரம் (வயது 28) என்பவர் பலத்த காயமடைந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு க ஸ்டாலின் அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார். அதோடு போக்குவரத்து கழக நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாயும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாயும் ஆக மொத்தம் மூன்று லட்சம் ரூபாயினை நிவாரணமாக வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டதன் அடிப்படையில் மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ் சிவசங்கர் அவர்கள் இந்நிதியினை நேரில் சென்று வழங்கினார்.

Categories

Tech |