சென்னையில் நேற்று காலை மேகமூட்டம் காணப்பட்ட நிலையில் பிற்பகலில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும் குடியிருப்பு பகுதிகளுக்கும் தண்ணீர் புகுந்தது. இந்நிலையில் வாணிய மகால் வழியாக செல்லும் பேருந்துகள் பாரதிராஜா ஜங்ஷன் வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளது என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
Categories