Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் மெட்ரோ ரயில் ஐந்தாம் கட்ட விரிவாக்கத்திற்கான கட்டுமான பணிகள் மேடவாக்கம் சோழிங்கநல்லூர் இடையே செம்மொழி சாலையில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் செம்மொழி சாலையில் டிஜிட்டல் மார்ட் அருகே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தாம்பரம் மாநகர போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர் .அதன்படி தாம்பரம் மற்றும் வேளச்சேரி பிரதான சாலையிலிருந்து மேடவாக்கம் செம்மொழி சாலை வழியாக பெரும்பாக்கம் நோக்கி செல்லும் வாகனங்கள் தற்போது பள்ளிக்கரணை காவல் நிலைய சந்திப்பு வழியாக செல்கின்றது.

அதில் எவ்வித மாற்றமும் இல்லை.ஆனால் பெரும்பாக்கம் செம்மொழி சாலையிலிருந்து வேளச்சேரி பிரதான சாலை நோக்கி செல்லக்கூடியவர்கள் டிஜிட்டல் மார்பிலிருந்து பள்ளிக்கரணை போலீஸ் நிலையம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதற்கு மாறாக அனைத்து வாகனங்களும் டிஜிட்டல் மார்டு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி ராதா நகர் பிரதான சாலை மற்றும் மாம்பாக்கம் சாலை வழியாக மேடவாக்கம் மற்றும் மாம்பாக்கம் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும் என்று வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |