சென்னையில் மெட்ரோ 2 ஆம் கட்ட பணிகள் பல்வேறு பகுதிகளில் தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கக்கூடிய வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் உள்ள ஈவேரா சாலையில் இன்று முதல் சோதனை முயற்சியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது கோயம்பேடு அமைந்தகரை நோக்கி செல்லும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் வளைவில் இடது புறமாக திரும்பி, அண்ணா நகரில் இருந்து கோயம்பேடு செல்லும் வாகனங்கள் அண்ணா வளைவில் வலது புறம் திரும்பி செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அண்ணா ஆர்ச் வளைவில் இடது புறமாக திரும்பி விடப்படும் வாகனங்கள், ஈவேரா சாலை மூலமாக அமைந்தகரையை சென்று அடையலாம். அதன்பிறகு அமைந்தகரையில் இருந்து கோயம்பேடு நோக்கி செல்லும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் சந்திப்பில் எந்த போக்குவரத்து தடையும்யின்றி செல்லலாம் என்று போக்குவரத்து காவல்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் வடபழனி சந்திப்பில் இருந்து அசோக் பில்லர் வரை இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது 100 அடி சாலை 2 வது நநிழற்சாலை சந்திப்பில் இருந்து 4க்வது நிலற் சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. அதனைப் போல அசோக் பில்லர் வழியாக வடபழனி கோயம்பேடு கே.கே.நகர் செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம். அசோக் பில்லர் வழியாக தியாகராய நகர் கோடம்பாக்கம் செல்லும் வாகனங்கள் அம்பேத்கர் சாலை வழியாக செல்லலாம். வடபழனியிலிருந்து 2 வது நிலற் சாலை சந்திப்பில் இடது புறத்தில் திரும்பி, 4 வது நிலற்சாலை வழியாக தியாகராயநகர் செல்லலாம். அதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை கிண்டி மார்க்கம் வழியாகவும், விமான நிலையம் முதல் சென்ட்ரல் நிலையம் வரை கோயம்பேடு மார்க்கம் வழியாகவும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. மேலும் மெட்ரோ ரயில் இயக்குவதற்கான கட்டுமான பணிகள் வளசரவாக்கம், போரூர், வடபழனி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்பதால் இன்று முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.