Categories
மாநில செய்திகள்

சென்னையில் மட்டுமே தேர்வு…. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஒவ்வொரு தேர்வுகளும் நடந்து முடிந்துள்ளன. அதன்படி vocational counsellor மற்றும் community officer பதவிகளுக்கான அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் இறுதியில் வெளியானது. இதனைத் தொடர்ந்து விண்ணப்பதாரர்களுக்கு கணினி வழி தேர்வு நடத்தப்பட உள்ளது.இந்தப் பணியில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய தொழில் ஆலோசகர் மற்றும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய சமூக மேம்பாட்டு பணியில் அடங்கிய சமூக ஆர்வலர் பதவிகளுக்கான கணினி வழி தேர்வு வருகின்ற நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், சேலம்,திருச்சிராப்பள்ளி மற்றும் திருநெல்வேலி ஆகிய ஆறு மாவட்டங்களில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த எழுத்து தேர்வு சில நிர்வாக காரணங்களால் சென்னையில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதனால் தேர்வர்கள் அனைவரும் தங்களை தேர்வுக்கு தயார்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை அறிய டிஎன்பிஎஸ்சி இணையதள பக்கத்தை அணுகலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |