Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் மட்டும் இவ்வளவு பாதிப்பா?…!!!

சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், இறப்பு மற்றும் குணமடைந்தவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால், கடந்த சில நாட்களாக நாளொன்றுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொடக்கத்தில் சென்னை மற்றும் சென்னையைச் சார்ந்துள்ள மாவட்டங்களில் மட்டுமே அதிக அளவு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. ஆனால் ஜூலை மாதம் முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பரவல் அதிகமாக தென்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், இறப்பு மற்றும் சிகிச்சையிலிருந்து குணமடைந்தவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

மண்டலம் குணமானவர்கள் இறப்பு பாதிப்பு
திருவொற்றியூர் 3,870 126 260
மணலி 1,858 29 161
மாதவரம் 3,882 62 574
தண்டையார்பேட்டை 10,085 262 809
ராயபுரம் 11,882 277 862
திருவிக நகர் 8,639 268 1,042
அம்பத்தூர் 7,607 133 1,197
அண்ணா நகர் 12,838 282 1,547
தேனாம்பேட்டை 11,479 377 884
கோடம்பாக்கம் 12,873 285 1,548
வளசரவாக்கம் 6,776 132 1,098
ஆலந்தூர் 3,869 71 635
அடையாறு 8,411 174 1,258
பெருங்குடி 3,476 64 556
சோழிங்கநல்லூர் 2,856 28 564
இதர மாவட்டம் 1,554 53 376
மொத்தம் 1,11,955 2,623 13,371

Categories

Tech |