சென்னையில் தேர்தலுக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை படிப்படியாக தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழகத்தில் அமலில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். அதன்படி ஒரு நாளைக்கு கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை கடந்துள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தபடுமா என்ற மக்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.
இந்நிலையில் ஏற்கனவே தளர்வுகள் உடன்அமல் படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தேர்தலுக்குப் பிறகு கொரோனாவை கட்டுப்படுத்த சென்னையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். முக கவசம் அணிவது கடுமையாக்கப்படும். உணவகங்கள், ரெஸ்டாரன்ட் மற்றும் மால்களை கண்காணித்து விதிமீறல்கள் இருந்தால் சீல் வைத்து 20 நாள் மூடப்படும். மேலும் சுற்றுலா தளங்கள், மெரினா கடற்கரையில் எந்த விதமான கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என ஆலோசனை நடந்து வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.