தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் பரவத் தொடங்கியது. இதனால் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கனிசமான அளவு குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளவுர்கள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது . மாநிலத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,654 பேருக்கு தொற்று கன்டறியபட்டுள்ளது.இவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 1,066 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட்ட பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து மாநகராட்சி சார்பில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அதிக அளவில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களாக சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வருகிறது.
எனவே பொதுமக்கள் கட்டாயம் முகவசம் அணிந்து சமூக இடைவெளியே தவறாமல் பின்பற்ற வேண்டும். பொது சுகாதாரத் துறையின் அறிவுத்தலின்படி முகக்கவசம் அணிவது குறித்த பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து வணிக நிறுவனங்கள் தங்களுடைய அங்காடிகளில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூறுவதை தவிர்த்து, சமூக இடைவெளியை பின்பற்றி பொது மக்களை அனுமதிக்க வேண்டும். வணிக வளங்கள், திரையரங்குகள், துணிக்கடைகள் போன்ற வணிக நிறுவனங்கள் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதை அந்தந்த நிறுவனங்களை உறுதி செய்ய வேண்டும். மேலும் ஒவ்வொரு தனிநபரும் கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வெளியில் செல்லும்போது தவறாமல் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும். எனவே கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மாநகராட்சி நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.