சென்னையில் முக கவசம் அணியும் பழக்கம் குறைந்து வருவதாக ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு முந்தைய வாரம் வரை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 75 இடங்களில் ஐசிஎம்ஆர் 6130 தனி நபர்களிடம் சர்வே எடுத்தது. இதில் தெருக்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற குடிசைப் பகுதிகள் அருகில் உள்ள பொது இடங்களில் 32% பேர் சரியாக அணிகிறார்கள். வெளிப்புற பொது இடங்களில் 35% பேர் அணிகிறார்கள். மளிகை கடைகள், மருந்து கடைகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் 14 சதவீதம் பேரும் மற்ற இடங்களில் 20 சதவீதம் பேரும் முகக்கவசம் அணிகிறார்கள்.
வணிக வளாகங்களுக்கு வரும் மக்களில் 57% பேர் முகக்கவசம் அணிந்து வருகிறார்கள். மற்றவர்கள் அணிவதில்லை. மற்றவர்கள் அணிவதில்லை. சென்னையில் 54 சதவீதம் பேர் மட்டுமே இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தி உள்ளனர். கொரோனா இரண்டாம் அலை ஏற்பட்டபோது முக கவசம் அணியும் பழக்கம், பொதுமக்களிடையே பரவலாக இருந்தது. தற்போது அந்த பழக்கம் குறைந்து விட்டதாக ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.