Categories
சினிமா தமிழ் சினிமா

சென்னையில் முக்கிய சினிமா பிரபலம் காலமானார் – சோகம்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகின்றது. இதற்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில்  ஒரு சிலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல டப்பிங் கலைஞரும், நடிகருமான ஆர். வீரமணி கொரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இவர் பல வருடங்களாக டப்பிங் யூனியனில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வந்தவர். 2004- 2006 வரை டப்பிங் யூனியனில் தலைவராக இருந்தவர். எம்.ஆர் ராதாவின் நாடக கம்பெனியில் இருந்து வந்தவர். சிவாஜி அரசியல் கட்சி தொடங்கியபோது அதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |