சென்னை மாவட்டத்தில் முக்கிய பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இருக்கும் நவீன டிஜிட்டல் காலகட்டத்தில் ஒரு நொடி கூட மின்சாரம் இல்லாமல் மக்கள் இருக்க முடிவதில்லை. ஆனாலும் மின் தடை ஏற்படும் போது மக்கள் ஜெனரேட்டரை பயன்படுத்தி மின்சாரத்தை பெற்று வருகின்றனர். இது போல சென்னை போன்ற பெரு நகரங்களில் மின் தடை ஏற்படும் போது ஒரு நாளுக்கு முன்னரே மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாவட்டத்தில் இன்று மின்தடை செய்யப்பட உள்ளதாக துணை மின் நிலையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் துணை மின் நிலையம் சார்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள காரணத்தினால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளான போரூர், கோவூர், தண்டையார்பேட்டை, பெருங்குடி, சூளைமேடு, கோடம்பாக்கம், வடபழனி, கே கே நகர் கிழக்கு ,எம்ஜிஆர் நகர், கேகே நகர் மேற்கு, பட்டாபிராம், ராணிப்பேட்டை 1 ஆகிய துணை மின் நிலையங்களில் சுற்றியுள்ள இடங்களில் மின் தடை ஏற்பட உள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு மீண்டும் இரண்டு மணிக்குள் மின்வினியோகம் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தலைநகர் சென்னையில் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் ஒரு பகுதியில் உள்ள மல்டி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், சக்கரபாணி நகர், பாரதி நகர், பச்சையம்மன் நகர், ஆறுமுக நகர், கோவூர்,பெரியபனிச்சேரி, தண்டலம், பாபு கார்டன், மணிகண்டன் நகர் ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள இடங்கள்.
மேலும் அதனை தொடர்ந்து, தண்டையார்பேட்டை/டோல்கேட் பகுதியில் உள்ள டி.எச் ரோடு, எம்.ஜி.ஆர் சாலை, தனபால் நகர், செட்டி தெரு, வெங்கடேசன் அலி தெரு, ஏ.இ கோயில் தெரு, மேற்கு மேடதெரு, சன்னதி தெரு போன்ற இடங்களை சுற்றியுள்ள பகுதிகள், பெருங்குடி பகுதியில் உள்ள பெருங்குடி தொழிற்பேட்டை, பர்மா காலனி, நீலாங்கரை, பாலவாக்கம், பெத்தேல் நகர், செந்தில் நகர், வி.எஸ்.ஐ எஸ்டேட்., நேருநகர் ஆகிய இடங்களிலும், சென்னையின் மிக முக்கிய நகரான கே.கே நகர் பகுதி சூளைமேடு, கோடம்பாக்கம், வடபழனி, கே..கே நகர் கிழக்கு, எம்.ஜி.ஆர் நகர், கே.கே நகர் மேற்கு ஆகிய இடங்களிலும், ஆவடி,பட்டாபிராம் பகுதியில் ஐயப்பன் நகர், வி.ஜி.வி நகர், தனலட்சுமி நகர், பாரதி தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகளிலும், மேலும் அதனை தொடர்ந்து ராயப்பேட்டை-I பகுதியில் உள்ள பீட்டர்ஸ் ரோடு, பாரதி சாலை, ஜெ.ஜெ கான் ரோடு, தேவராஜ் தெரு, பாலாஜி நகர், திருவல்லிக்கேணி பகுதி, வராதப்பிள்ளை தெரு ஆகிய இடங்களிலும் மின்தடை ஏற்பட்ட இருப்பதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.