சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக பணங்கள் பூங்கா, வெங்கட்நாராயணா சாலை மற்றும் நந்தனம் பகுதிகளில் நவம்பர் 12ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், சாலையில் தற்போது உள்ள ஒரு வழி பாதையில் இருந்து மாற்றப்பட்டு பனகல் பூங்காவில் இருந்து செல்லலாம். தணிகாசலம் சாலை சந்திப்பிலிருந்து பனகல் பூங்காவிற்கு செல்லும் வாகனங்கள் தணிகாசலம் சாலை வெங்கடாநாராயண சாலை வழியாக பனகல் பார்க் அடையலாம். அதேசமயம் உஸ்மான் சாலையிலிருந்து பாசியம் சாலை வழியாக போத்தீஸிற்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அங்கு வரும் வாகனங்கள் சாராய சாலை மற்றும் தணிகாசலம் சாலை வழியாக திருப்பி விடப்படும் எனவும் பற் கிட் சாலையில் இருந்து வரும் மாநகர பேருந்துகள் தணிகாசலம் சாலை வழியாக செல்ல தடை செய்யப்பட்டு சிவன் ஞானம் சாலை மற்றும் தியாகராய சாலை வழியாக திருப்பி விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நந்தனம் சந்திப்பிலிருந்து வெங்கடநாராயணர் சாலை வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் பன கல் பூங்கா வரை வழக்கம் போல செல்லலாம் எனவும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.