Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பே இல்லை… மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை…!!!

சென்னையில் முழு ஊரடங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை படிப்படியாக தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழகத்தில் அமலில் உள்ளது.

ஆனால் தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். அதன்படி ஒரு நாளைக்கு கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை கடந்துள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தபடுமா என்ற மக்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. அதனால் ஏற்கனவே தளர்வுகளுடன்அமல் படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பே இல்லை, முழு ஊரடங்கு என்ற வதந்தியை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முழு ஊரடங்கு என்ற சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியான நிலையில் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.

Categories

Tech |