Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் மேலும் ஒரு எஸ்.ஐ பலி …. மீனம்பாக்கம் பகுதியில் சோகம் ..!!

சென்னையில் மேலும் ஒரு காவல்துறை அதிகாரி கொரோனாவுக்கு மரணம் அடைந்திருக்கிறார்.

சென்னை தாம்பரம் போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் குருமூர்த்தி. இவர் மீனம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகின்றார். அவர் அந்த பகுதியில் வாகன ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இவருக்கு கடந்த மாதம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மனையில் கடந்த மாதம் 26ம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று உடல்நிலை மிகவும் மோசமடைந்தது கவலைக்கிடமான நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ள்ளார்.

சென்னையில் ஏற்கனவே போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மூன்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தற்போது  இவர் மரணமடைந்தது மீனம்பாக்கம் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |