சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மட்டும் 21 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பெரும் மின்னல் வேகத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. பொரோனோ பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது சென்ற சில நாட்களாகவே நாளுக்குநாள் புதிய உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கிறது. சென்னையில் சென்ற சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகின்ற நிலையிலும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆனது தினமும் பெரும் கவலையை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில் சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரையில் மட்டும் 21 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்திருக்கின்றனர். இவற்றுள் அரசு மருத்துவமனைகளில் 14 பேரும் தனியார் மருத்துவமனைகளில் ஏழுபேரும் என மொத்தம் 21 பேர் பலியாகியுள்ளனர்.