Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் மேலும் 23 பேர் உயிரிழப்பு … பலி எண்ணிக்கை 1000ஐ கடந்தது ….!!

கொரோனா தொற்றால்  சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மருத்துவமனைகளில் 23 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 64 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் மொத்தமாக தமிழகத்தில் 1385 பேர் இதுவரைக்கும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு இறந்திருக்கிறார்கள். குறிப்பாக தலைநகர் சென்னையில் நேற்று ஒரே நாளில் 32 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் சென்னையில் உயிரிழப்பு என்பது 996 ஆக உயர்ந்திருப்பதாக சுகாதாரத் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சென்னையில் உயிரிழப்பு என்பது ஆயிரத்தை கடந்துயிருக்கிறது.

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரைக்கும் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 23  பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்கள். அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 9 பேர், அரசு ஸ்டாலின் மருத்துவமனையில் 6 பேர், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 4 பேர், அரசு கீழ்பாக்கம் மருத்துவமனையில் 3 பேர், தனியார் மருத்துவமனையில் ஒருவர் என மொத்தம் 23 பேர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்கள். இதனால் மொத்த உயிரிழப்பு ஆயிரத்தை கடந்து இருக்கிறது.

Categories

Tech |