Categories
மாநில செய்திகள்

சென்னையில் ரூ.120 கோடியில்…. தமிழக அரசு செம சூப்பர் அறிவிப்பு…!!!!

சென்னையில் கடந்த மாதத்தில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து குறிப்பிட்ட அந்த பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் கடந்த காலங்களில் மழை நீர் தேங்கிய 144 இடங்களில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதன் முதல் கட்டமாக தண்டையார்பேட்டை, ராயபுரம்,, திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மண்டலங்களில் பணி நடைபெற உள்ளது. சென்னையில் ரூபாய் 120 கோடியில் 45 கிலோ மீட்டர் நீளத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Categories

Tech |