Categories
மாநில செய்திகள்

சென்னையில் வரப்போகும் புதிய மாற்றங்கள்…. லிஸ்ட் போட்ட மாநகராட்சி…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…..!!!!

சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் இருக்கிறது. இவை சோழிங்கநல்லூர், பெருங்குடி, அடையார், ஆலந்தூர், வளசரவாக்கம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணா நகர், அம்பத்தூர், திருவிக நகர், ராயபுரம், தண்டையார்பேட்டை, மாதவரம், மணலி மற்றும் திருவொற்றியூர் என 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 15 மண்டலங்களை தற்போது 23 மண்டலங்களாக பிரிப்பதற்கு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்த மண்டலங்களை பிரிப்பதற்கு ஓராண்டுகள் ஆகும். ஏனெனில் மண்டல அலுவலகங்கள் மற்றும் அதற்கான அதிகாரிகள் நியமிக்கப்பட சற்று காலதாமதம் ஆகும். இந்நிலையில் வடக்கு, மத்திய மற்றும் தென் சென்னை பகுதிகளில் 5 மண்டலங்கள் இருக்கிறது. இந்த 5 மண்டலங்களை 8 மண்டலங்களாக உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி சோழிங்கநல்லூர் மண்டலம் 2 மண்டலங்களாக பிரிக்கப்படுவதுடன், திருவொற்றியூர் அதிக வார்டுகளை கொண்ட மண்டலமாக மாறும். அதாவது திருவொற்றியூரில் 18 வார்டுகள் இடம்பெறும். இதற்கு அடுத்தபடியாக மாதவரத்தில் 15 வார்டுகளும், மதுரவாயிலில் 15 வார்டுகளும், அம்பத்தூரில் 13 வார்டுகளும், ஆலந்தூரில் 12 வார்டுகளும் இடம் பெறுவதுடன், தண்டையார் பேட்டையில் உள்ள பழைய வண்ணார்பேட்டை ராயபுரம் மண்டலத்திற்கு மாற்றப்படும். இதேபோன்று அம்பத்தூரில் உள்ள முகப்பேறு மதுரவாயில் மண்டலத்திற்கு மாற்றப்படும். இதற்கு சில குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதாவது கூடுதல் மண்டலங்கள் உருவாக்கப்படுவதால் கூடுதலாக பணியிடங்கள் உருவாக்கப்படும்.

அதற்கான ஆட்களையும் நியமிக்க வேண்டும். இதில் காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் பணிகள் முடங்கிவிடும் என்கின்றனர். இதனையடுத்து மாநகராட்சி வார்டுகளுடன் மெட்ரோ வார்டுகள் ஒருங்கிணைக்கப்படும். ஆனால் புதிதாக கொண்டுவரப்படும் மாற்றங்கள் குறித்து சென்னை வாசிகளிடம் எந்த ஒரு ஆலோசனையும் கேட்கப்படவில்லை. மேலும் ஒவ்வொரு வார்டுக்கும் சென்று கவுன்சிலர்கள் நிறைகுறைகளை கேட்பதற்கும் காலதாமதம் ஏற்படும் என்றும், பொதுமக்களிடம் ஆலோசனை கேட்காமல் மாநகராட்சி முடிவு எடுத்திருப்பதாகவும் பல்வேறு தரப்பிலிருந்து குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Categories

Tech |