கொரோனாவிற்கு தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதனால், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வமாக தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் வரும் 12ஆம் தேதி தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தி 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து சென்னை மாநகராட்சி தடுப்பூசி முகாமை துரிதப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளது. அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரும் 12ம் தேதி 1,600 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.