Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் விதியை மீறினால்… இன்று முதல் ரூ.200 அபராதம்… அதிரடி அறிவிப்பு…!!!

சென்னை மெட்ரோ ரயிலில் முக கவசம் அணியாமல் பயணிப்பவர்களிடம் இன்று முதல் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.

ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயிலில் முக கவசம் அணியாமல் பயணிப்பவர்களிடம் இன்று முதல் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் கட்டாயம் முக கவசம் அணிந்து பயணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |