Categories
மாநில செய்திகள்

சென்னையில் விமான போக்குவரத்து ரத்து… வெளியான தகவல்..!!

சென்னையில் கொரோனா இரண்டாம் நிலை காரணமாக உள்நாட்டுப் விமானப் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அசுரவேகத்தில் பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் வெளி மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் கட்டாயம் இ பாஸ் வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவல் இரண்டாவது அலை காரணமாக சென்னையில் 18 உள்நாட்டு போக்குவரத்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பெங்களூரில் இருந்து வந்த விமானத்தில் எட்டு பயணிகளும், ராய்ப்பூரில் இருந்துவந்த விமானத்தில் 5 பயணிகளும், கோழிக்கோட்டில் இருந்து ஏழு பயணிகளும் வந்த நிலையில் விமான போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது.

Categories

Tech |