பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகையின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக தற்போது பல்வேறு மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.
மின்சார வாகனங்களை பயன்படுத்துமாறு பல மாநிலங்களிலும் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் விரைவில் 88 இடங்களில் எலக்ட்ரிக் வாகனங்களின் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப்படும் என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. உலகமே எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி பயணப் படும்போது அதில் உள்ள பெரிய சிக்கல் சார்ஜிங் ஸ்டேஷன்கள் இல்லாததுதான். அரசு அதனை செய்து கொடுக்கும்போது வாகனங்களில் எண்ணிக்கை தானாக அதிகரிக்கும். அதன் முதல்படியைதான் சென்னை மாநகராட்சி எடுத்து வைக்கிறது.