தமிழகத்தில் போக்குவரத்து துறை சார்பாக மின்சார பேருந்துகள் வாங்கவும் முதற்கட்டமாக சென்னையில் மின்சார பேருந்துகளை வாங்கிய இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், தமிழகத்திற்கு புதிதாக 500 மின்சார பேருந்துகளை வாங்கி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக சென்னைக்கு 100 பேருந்துகள் விரைவில் வரவுள்ளது. இந்த மின்சார பேருந்துகள் சோதனை முறையில் இயக்கப்படும்.
இது வெற்றியடைந்த பின்னர் தமிழக முழுவதும் இயக்குவதற்காக மின்சார பேருந்துகள் புதிதாக வாங்கப்படும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக முதல் கட்டமாக சென்னை போக்குவரத்து கழக பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றது.அது நிறைவு பெற்ற பிறகு தமிழக முழுவதும் அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.