Categories
மாநில செய்திகள்

சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்…. வெளியான முக்கிய தகவல்….!!!!

மெட்ரோ ரயில் திட்டம் சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு முதல் கட்டமாக போக்குவரத்து நடைபெற்று வருகிறது. அடுத்ததாக 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் 2-வது கட்ட திட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் மெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம் பால்பண்ணையில் இருந்து சோழிங்கநல்லூர் வரை அமைக்கப்படும் திட்டம் முக்கியமான ஒன்றாக கூறப்படுகிறது.

அதோடு மட்டுமில்லாமல் ஜப்பானிடம் 2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை நிறைவேற்றுவதற்காக நிதியுதவி கேட்கப்பட்டுள்ளது. அதன்பேரில் நிதியுதவி வழங்க ஜப்பான் சர்வதேச கழகம் சம்மதித்துள்ளது. இதற்கான ஒப்பந்தங்கள் நேற்று செய்யப்பட்டன. அந்த வகையில் ரூபாய் 4,710 கோடி ஜப்பானிலிருந்து நிதியுதவி கிடைக்க உள்ளது. இது தவிர ரூபாய் 680 கோடி கடன் உதவியை தமிழகத்தில் பசுமை திட்டங்களுக்காக ஜப்பான் வழங்கியுள்ளது.

Categories

Tech |