சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு முனையத்தில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட விமானங்களும், உள்நாட்டு முனையத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட விமானங்களும் இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் சென்னையில் மற்றொரு விமான நிலையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.
அதன்படி சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூர், பன்னூர் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் படாளம் ஆகிய நான்கு இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தை தேர்வு செய்து அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த நான்கு இடங்களையும் விமான போக்குவரத்து குழுவினர் ஆய்வு செய்தனர். பின்னர் பன்னூர், பரந்தூர் ஆகிய இரண்டு இடங்களையும் இறுதியாக தேர்வு செய்துள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசு தீவிர பரிசீலனை செய்து வருகிறது. விரைவில் இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ள இடத்தை தமிழக அரசு தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.